ஒளிரீர்முனைக் காட்சிகளில் (LED Display) மென்தமிழ்:
சில சமயம், எழுபகுதி ஒளிரீர்முனைக் காட்சிகளில் (7 segment LED Display) மென்தமிழ் எழுத்துக்களை காட்ட வேண்டிய அவசியம் ஏற்படும். அப்போது இங்கு தரப்பட்டுள்ள படத்தின் படி அவைகளை ஒளிரச் செய்யலாம். உயிர் எழுத்துக்களும், வல்லின எழுத்துக்களும் நேராகவும், மெல்லின மற்றும் இடையின எழுத்துக்கள் இடப்புறம் 90 மணிகள் திருப்பியும், ஆயுத எழுத்துக்கள் ஒன்று சேராத கோடுகளாகவும் காட்டப்பட்டுள்ளன. எளிதாக படிப்பதற்காக, இடப்புறம் திருப்பப்பட்ட மெல்லின மற்றும் இடையின எழுத்துக்களுக்கு தசம புள்ளியும் ஒளிர வைக்கப்பட்டுள்ளன.


(எண்கள், குறில், நெடில், வல்லினம், மெல்லினம், இடையினம் மற்றும் ஆயுதம்)
இதே போல, பதினென்பகுதி (14 segment) ஒளிரீர்முனைக் காட்சிகளிலும், பதினறுபகுதி (16 segment) ஒளிரீர்முனைக் காட்சிகளிலும், 5க்கு7 அணி (5x7 matrix) ஒளிரீர்முனை / திரவப்படிகக் (LCD) காட்சிகளிலும், மெல்லின மற்றும் இடையின எழுத்துக்கள் தசம புள்ளியுடன் இடது பக்கம் திருப்பப் படவேண்டும். 8க்கு8 அணி (8x8 matrix) ஒளிரீர்முனை அல்லது திரவப்படிகக் காட்சிகளில் அனைத்து எழுத்துக்களையும் நேராகக் காட்டலாம்.

(பதினென்பகுக்காட்சியில் மென்தமிழும் காட்டப்படும் விதமும்)

(5க்கு7 அணிக் காட்சியில் மென்தமிழ்)