யூனிகோடில் மென்தமிழ்:
மென் தமிழ் குறியீடுகள் , என மொத்தம் எழுத்துக்கள் 32 குறியீடுகள். இதில் ‘’ குறியீட்டின் அறுபதின்ம (Hexadecimal) எண்ணின் இறுதி இட எண் (Last digit) எப்போதும் சுழியாக (0) இருக்க வேண்டும். இவ்விதியைக்கொண்டு யுனிகோடில் மென் தமிழின் இடத்தினைத் தீர்மானிப்போம்.
மென் தமிழ் குறியீடுகள் என்பது தற்போது யாரும் பயன்படுத்தாத நிலையில், யூனிகோடின் தனிப்பயன்பாட்டுப் பகுதியான (Private Use Area) E000 இலிருந்து F8FF இற்குள் இருக்க வேண்டும். தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட TACE நியமம் E100 இலிருந்து E3FF வரை எடுத்துக்கொள்கிறது. அதில் E390 இலிருந்து E3FF வரை எதிர்காலப் பயன்பட்டிற்கு என்று ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கடைசி 32 இடங்களான E3E0 இலிருந்து E3FF வரையிலான இடங்களை மென் தமிழ் குறியீடுகளுக்கு பயன்படுத்தி TACE மற்றும் யூனிகோடுக்கான எழுத்துருவை உருவாக்கியுள்ளேன். ‘’ குறியீட்டின் அறுபதின்ம மதிப்பான E3E0 இன் இரும (Binary) மதிப்பு 1110001111100000 ஆகும். அதன் தசம மதிப்பு 58336 ஆகும்.
