மென்தமிழ் விசையட்டை:
சிறப்பம்ச கைபேசிகளிலுள்ள விசையட்டையில் மென்தமிழ் எழுத்துக்கள் கீழ்க்கண்ட படத்தில் உள்ளது போல் பயன்படுத்தவேண்டும். மென்தமிழில் விசையட்டையில் தட்டும்போது திரையில் மூன்று தமிழ் வார்த்தைகள் முன்கணிக்கப்பட அதனை *, 0 மற்றும் # விசை மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும். வார்த்தையைத் தேர்ந்தெடுத்த பின் * அழுத்தினால், முற்றுப்புள்ளி, அரைப்புள்ளி, காற்புள்ளி போன்ற நிறுத்தக்குறிகள் வரவேண்டும். இல்லையென்றால் இடைவெளி வரவேண்டும். நீண்ட நேரம் * அழுத்தினால் நிறுத்தக்குறிகளும், 0 அழுத்தினால் இடைவெளியும் வரவேண்டும்.

இவ்விசையட்டையில் , , , மற்றும் இல்லை என்பதைக் காணலாம். இருமுறை விசை 2 ஐ அழுத்தினால், விசை செயலி அதனை தமிழில் ஆ, ஈ, ஊ, ஐ மற்றும் ஔ என எடுத்துக்கொண்டு, அதற்கேற்றாற்போல் வார்த்தை தெரிவுகளை வழங்கவேண்டும். தமிழ் வார்த்தைகளைத் தட்டும்போது இரண்டு மெய்யெழுத்து தொடர்ந்து வந்தால், முதல் மெய்யெழுத்துடன் அ சேர்த்தும், சேர்க்கமலும் முன்கணிப்பு செய்து வார்த்தகளைப் பரிந்துரைக்கலாம். விசை 3இல் உள்ள , தமிழில் ஆயுத எழுத்தினை எழுதப் பயன்படுத்தவேண்டும். மற்றப்படி, குறியீடு பிற ஆயுத எழுத்துக்களுக்கான பொதுவான குறியீடாகவும் தரப்பட்டுள்ளது.
நேரடியாக மென்தமிழில் உள்ளீடு செய்ய, விசைகளை பல முறை அழுத்தி, சுழற்சி முறையில் மென்தமிழ் எழுத்துக்கள் தோன்ற, வேண்டிய எழுத்தில் சற்று நிறுத்தியோ அல்லது வேறு விசை அழுத்தியோ எழுத்துக்களைத் தேர்வு செய்ய வேண்டும். விசை 1ஐ அழுத்தினால், எனவும், விசை 2ஐ அழுத்தினால், எனவும் சுழற்சி முறையில் திரையில் அச்சிடவேண்டும்.
மூன்றாவதாக, மேற்குறிப்பிட்ட இரண்டு முறைகளையும் இணைத்து, முன்கணிப்பு முறையில் தமிழ் வார்த்தைளை (அல்லது பிறமொழி வார்த்தைகளையும்) மென்தமிழிலேயே உள்ளீடு செய்யலாம்.