எண்கள் மட்டும் கொண்ட கணிப்பப்பொறிக்கு (Calculator) எண்கள் அல்லது கணிதக் குறியீடுகள் உள்ளீடு செய்ய இரண்டு முறை தட்ட வேண்டியதில்லை. கீழ்க்கண்ட அட்டவணையை கொண்டு இடது பெருவிரலைப் பயன்படுத்தி ஒரே முறை தொடுதிரையில் தட்டி விடை கண்டுபிடிக்கலாம். சமக்குறியீட்டிற்கு (=) மட்டும் இரண்டு முறை திரையைத் (– –) தட்டவேண்டும் அல்லது புதிய அடிக்கான வலது பெருவிரல் மற்றும் மூன்று விரல்கள் தட்டி விடை காணலாம்.
ஒரு விரலால் வலப்புறம் தள்ளுதல் - கடைசி ஒற்றை எண்ணை அழி
இரு விரலால் வலப்புறம் தள்ளுதல் - கடைசி முழு எண்ணை அழி
மூன்று விரலால் வலப்புறம் தள்ளுதல் - முழு கணக்கையும் அழி
ஒரு விரலால் இடப்புறம் தள்ளுதல் - நினைவில் கொள்
இரு விரலால் இடப்புறம் தள்ளுதல் - நினைவில் கூட்டு
இடது பெருவிரல் தொடும்போது:
ஒரு விரலால் வலப்புறம் தள்ளுதல் - நினைவில் உள்ளதை எடு
ஒரு விரலால் இடப்புறம் தள்ளுதல் - நினைவில் உள்ளதை அழி
இரு விரலால் இடப்புறம் தள்ளுதல் - நினைவில் கழி