• மென்தமிழ்
    • மென்தமிழ் பற்றி
    • மென்தமிழ் கொள்கைகள்
    • மென்தமிழ் பயன்பாடுகள்
  • மென்தமிழ் எழுத்துக்கள்
    • அறிமுகம்
    • உயிரெழுத்துக்கள்
    • மெய்யெழுத்துக்கள்
    • ஆயுத எழுத்துக்கள்
    • நினைவில் கொள்ள
    • மென்தமிழ் எண்கள்
  • மென்தமிழ் விதிகள்
    • ஆயுதம் தரிக்கும் வல்லினம்
    • வில் ஏந்தும் இடையினம்
    • வேல் எய்தும் மெல்லினம்
    • மெய் இரண்டாக்கும் வாள்
    • வில் ஏந்தும் உயிர்
    • உயிர் நீட்டும் வாள்
    • வேல் ஏந்தும் உயிர்
    • கேடயம்
    • சொடுக்கிடும் வல்லினம்
    • யுத்த தொனி
    • உயிர் வெட்டுதல்
    • மௌனம்
    • ஆயுத அணிவகுப்பு
    • போர் விதிகள்
  • கணினியில் மென்தமிழ்
    • யூனிகோடில்
    • 8 பிட் எழுத்துருவில்
    • மென்தமிழ் எழுத்துருக்கள்
    • மென்தமிழ் விசைப்பலகை
    • மென்தமிழ் விசையட்டை
    • மின்னணுக் காட்சிகளில்
  • அணுகலில் மென்தமிழ்
    • உரை மற்றும் பேச்சு
    • தமிழ் ப்ரெய்ல்
    • மென்தமிழ் ப்ரெய்ல்
    • தமிழ் ப்ரெய்ல் தட்டச்சு
    • ப்ரெய்ல் தொகுப்பாக்கி
    • தொடுதிரை ப்ரெய்ல்
    • பின்னூட்ட அதிர்வுகள்
    • ப்ரெய்ல் வழிசெலுத்தல்
    • ப்ரெய்ல் கணிப்பப்பொறி
  • கருத்துக்கள்
    • உள்நுழை
    • உரையாடுக
  • mtamil,
  • accessibility,
  • braille

உரை பேசுதல், பேச்சறிதல் மற்றும் பேச்சுரை மாற்றுதல்

படிப்புகள்: 2361
  • அச்சிடுக
  • மின்-அஞ்சல்

உரை பேசுதல்:

            பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு மென்தமிழ் மிகவும் பயன்படும். மென்தமிழ் எழுத்துக்கள் ஒலி முறைப்படி உருவாக்கப் பட்டுள்ளதால், எழுத்துக்களைத் தட்டும்போதே பேசும்படி மென்பொருளை உருவாக்கலாம். இவ்வாறு பேசுதல், மென்தமிழ் எழுத்துக்களின் ஒலியின்படியோ அல்லது தமிழ் விதிகளின்படியோ இருக்கலாம். இதனை பயனாளர் விருப்பத்தின்படி தேர்வு செய்ய முடியவேண்டும்.

            ஏற்கனவே பதிவிடப்பட்ட உரையை படிக்கவும், திருத்தவும், பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு உரை பேசுதல் (text to speech) வசதி பயன்படும்.

பேச்சறிதல் மற்றும் பேச்சுரை மாற்றுதல்:

            பேச்சறிதல் (Speech Recognition) மற்றும் பேச்சுரை மாற்றுதல் (Speech to Text Conversion) பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல், பொதுவாகவே நவீன திறன்கருவிகளுக்கு (Smart Devices) பேச்சுக் கட்டளைகளை இடப் பயன்படுகிறது. மென்தமிழில் ஒலிகளும் குறியீடுகளும் ஏற்கனவே வரையறுக்கப்பட்டுள்ளதால், இது எளிதாகிறது. பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு பேச்சறிதல் வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பேச்சறிதலுக்கான தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு மென்தமிழ் மென்பொருள் இத்தொழில்நுட்பத்தைக் கொண்டிருப்பது அவசியமாகிறது.

தமிழ் ப்ரெய்ல்

படிப்புகள்: 2275
  • அச்சிடுக
  • மின்-அஞ்சல்

தமிழ் ப்ரெய்ல் - அறிமுகம்:

            பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு மென்தமிழ் எப்படி பயன்படும் என்பதைக் காண்போம்.

      பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் படிப்பதற்கும் எழுதுவதற்கும் ப்ரெய்ல் குறியீடுகளைப் பயன்படுத்துகிறார்கள். ப்ரேய்ல் என்பது மொழி அன்று. ஒவ்வொரு மொழிக்கும் விதவிதமான ப்ரெய்ல் குறியீடுகளைக் கொண்டு எழுத்துக்கள் குறிக்கப்படுகின்றன. ப்ரெய்ல் குறியீடுகளை உருவாக்கிய லூயி ப்ரெய்ல், ஃப்ரெஞ்ச் மொழி எழுத்துக்களுக்காக அவற்றை உருவாக்கினார். அவர் உருவாக்கிய முறையில் ஒவ்வொரு எழுத்தும் அதிகபட்சம் ஆறு புள்ளிகளைக் கொண்டிருக்கும். இந்த ஆறு புள்ளிகளும் மூன்று மூன்று புள்ளிகளாக தாயக் கட்டையில் உள்ளது போல இரண்டு நெடுவரிசையில் இருக்கும். முதல் நெடுவரிசைப் புள்ளிகளுக்கு 1, 2, 3 என்றும், இரண்டாம் நெடுவரிசைப் புள்ளிகளுக்கு 4, 5, 6 என்றும் எண் கொடுக்கப்பட்டது. இதைத் தவிர 3க்கு கீழ் 7ம் புள்ளியும், 6க்கு கீழ் 8ம் புள்ளியும் கொண்ட எட்டு புள்ளி ப்ரெய்ல் முறையும் உண்டு.

லூயி ப்ரெய்ல் 1, 2, 4, 5 புள்ளிகள் மூலமாக 10 வித குறியீடுகளை ஃப்ரெஞ்ச் மொழி எழுத்துக்களுக்காக வடிவமைத்தார். இந்த 10 குறியீடுகளைக் கற்றுக்கொண்டால், 3, 6 ம் புள்ளிகளைப் பொறுத்து அனைத்து ஃப்ரெஞ்ச் எழுத்துக்களையும் எண்களையும் எழுதிப் படிக்கலாம். ஆங்கிலமும் ஃப்ரெஞ்ச் மொழியைப் போலவே உரோம எழுத்துக்களைக் கொண்டு எழுதப்பட்டதால், அதனை அப்படியே எடுத்துக்கொண்டார்கள். ஃப்ரெஞ்சில் அப்போது w எழுத்து இல்லாததால், அதற்கு மட்டும் ஆங்கிலத்தில் ஒரு வித்தியாசமான குறியீடு தரப்பட்டது. இப்படி ஐரோப்பவில் உள்ள பல்வேறு நாடுகள், தங்கள் மொழிக்கேற்ப சிறுசிறு மாற்றங்களுடன் லூயி ப்ரெய்லின் குறியீட்டு முறையை ஏற்றுக்கொண்டார்கள்.

இந்தியாவில் பல்வேறு மொழிகள் (தமிழ் உட்பட) இவ்வாறு ப்ரெய்ல் முறையை மொழிக்கேற்றபடி மாற்றி பயன்படுத்தியதால், இந்திய அரசாங்கம், பாரத ப்ரெய்ல் என்ற குறியீட்டுத் தொகுப்பை அறிமுகப்படுத்தியது. இந்தக் குறியீட்டுத் தொகுப்பைத்தான் இந்தியாவில் உள்ள மொழிகள், சிற்சில மாற்றங்களுடன் பயன்படுத்துகின்றன. இந்திய மொழிகள் பெரும்பாலும் வல்லின வர்க்கங்களைப் பயன்படுத்துவதால், யூனிகோடில் எப்படி தமிழ் மெய்யெழுத்துக்கள் வரிசையாக இல்லாமல் வடமொழிகளுக்கு தகுந்தபடி தள்ளித்தள்ளி அமைத்திருப்பதுபோல், ப்ரெய்லிலும் தள்ளித்தள்ளி அமைந்துள்ளன. மேலும், ஆங்கில ப்ரெய்ல் குறியீடுகளை சார்ந்து பாரத ப்ரெய்ல் உருவாக்கப்பட்டதால், ஆங்கில எழுத்து ஒலிகளுக்கு ஒப்பான இந்திய மொழி எழுத்துக்களுக்கும் அதே ஆங்கில ப்ரெய்ல் குறியீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன, மிச்சமுள்ள குறியீடுகள் மிச்சமுள்ள எழுத்துக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இப்படி குறியீடுகளை ஒதுக்கியது புதிய மொழிகளைக் கற்றுக்கொள்ள எளிதாக இருந்தாலும், ப்ரெய்லின் முக்கிய நோக்கமான தாய்மொழியில் எழுதப்படிப்பது என்பதை கடினமாக்கிவிட்டது. இதனால், லூயி ப்ரெய்ல், ஃப்ரெஞ்ச் குறியீடுகளை எளிதாகக் கற்றுக்கொள்ளும்படி வடிவமைத்தபோதும், தமிழ் எழுத்துக்களின் குறியீடுகள் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் இருக்கின்றன. இதனால் பார்வையற்றவர்கள் தமிழில் குறைந்தபட்சம் வட எழுத்துக்களையும், எண்களையும் சேர்த்து 48 வித குறியீடுகளைக் கற்றுக்கொள்ள வேண்டியதாக உள்ளது. அதாவது ஒரு குறியீட்டின் அமைப்பை வைத்து அது உயிரெழுத்தா? மெய்யெழுத்தா? குறிலா? நெடிலா? வல்லினமா? இடையினமா? மெல்லினமா? வடஎழுத்தா அல்லது எண்ணா? என்று வகை பிரிக்க முடியாததாக உள்ளது. மென்தமிழ் ப்ரெய்ல் இந்த குறை இல்லாதபடி உருவாக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், கணினியில் எளிதாகப் பயன்படுத்தும்படியும் உருவாக்கப்பட்டுள்ளது.

மென்தமிழ் ப்ரெய்ல் உரை தொகுப்பாக்கி

படிப்புகள்: 2236
  • அச்சிடுக
  • மின்-அஞ்சல்

            தற்போது, பல புள்ளி தொடு (Multipoint Touch) திரை கைபேசிகளும், பலகை மற்றும் மடிக்கணினிகளும் குறைந்த விலையில் உபயோகத்திற்கு வந்துவிட்டன. பார்வை குறைபாடுடையவர்கள் பெரும்பாலும் விசைப்பலகை உள்ள கைபேசிகளைப் பயன்படுதினாலும், தொடுதிரை உள்ள கைபேசிகளை பயன்படுத்தவும் ஆரம்பித்து விட்டார்கள். பலபுள்ளி தொடுதிரை வசதியினை மென்தமிழ் ப்ரெய்ல் குறியீடுகளுடன் இணைத்து தொடுதல் மூலமாக மென்தமிழ் குறியீடுகளை உள்ளீடு செய்யும் ஒரு ப்ரெய்ல் உரை தொகுப்பாக்கி (Braille Text Editor) மென்பொருளுக்கான வரைவு கீழே தரப்பட்டுள்ளது.

            மென்தமிழ் ப்ரெய்லினை தொடுதிரையில் தட்டிட தொடுதிரையை கீழ்க்கண்டவாறு பிரிக்கவேண்டும். இடமேல் மூலையை இடது கை பெருவிரலுக்கும், கீழ் பகுதியை வலது கை பெருவிரலுக்கும் பிரித்து மீதமுள்ள பெரும்பாலான இடங்களை வலது கையின் மற்ற நான்கு விரல்களுக்கும் என்று நிச்சயித்துக்கொண்டு, கீழ்க்கண்ட செயல்கள் மூலமாக ப்ரெய்லினை அச்சிடலாம். ஒவ்வொரு எழுத்துக்கும் இரண்டு முறை திரையை தட்டவேண்டும். முதல் முறை தட்டும் போது 1, 2, 3 மற்றும் 7 ம் புள்ளிகளும், இரண்டாம் முறை தட்டும்போது 4, 5, 6 மற்றும் 8 ம் புள்ளிகளும் அச்சிடப்படும். இதற்கென்று தனியாக ப்ரெய்ல் குறியீடுகளுடன் நமக்கு தேவையான நான்கு புள்ளி குறியீடுகள் கொண்ட எழுத்துரு ஒன்று உருவாக்கியுள்ளேன். வலது கை 1, 2, 3 மற்றும் 4, 5, 6 புள்ளிகளை முடிவு செய்கிறது. இடது கை பெருவிரல் 7 மற்றும் 8 புள்ளிகளை முடிவு செய்கிறது. ஒவ்வொரு முறை ஒரு முழு எழுத்து தட்டப்படும் போதும் அந்த எழுத்து பேசப்பட (வாசிக்கப்பட) வேண்டும். ஒவ்வொரு சொல்லுக்கும் பிறகும் அச்சொல் பேசப்படவேண்டும்.

ப்ரெய்ல் தொகுப்பாக்கி அமைவு

தமிழ் ப்ரெய்ல் தட்டச்சு

படிப்புகள்: 2311
  • அச்சிடுக
  • மின்-அஞ்சல்

            பார்வை குறைபாடுள்ளவர்கள் ப்ரெய்ல் மூலம் எளிதாக எழுத்துக்களைப் படித்து விடுகிறார்கள். ஆனால் எழுதுவதற்கு ப்ரெய்ல் எளிதல்ல. எழுதுவதற்கு ப்ரெய்ல் காகிதத்தில் ப்ரெய்ல் ஆணியைக் கொண்டு குத்தி குத்தி எழுதவேண்டும். இதற்கு மிகவும் நேரம் எடுக்கும் என்பதைச் சொல்லவேண்டியதில்லை. இதனால் தொழில்நுட்பத்தின் உதவியால் பெரும்பாலும் ஒலிப்பிரதி எடுத்துக்கொள்கிறார்கள். தகவல் தொழில்நுட்ப கருவிகள் வந்த பிறகு ப்ரெய்ல் பயன்பாடு உலகம் முழுவதும் (தமிழகம் உட்பட) மிகவும் குறைந்துவிட்டது.

            இவ்வாறு ஒலிப்பிரதி எடுப்பது பயனுள்ளதாக இருந்தாலும், அதிலும் ஒரு சிக்கல் உள்ளது. பிரதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியை படிக்க, ஆரம்பத்தில் இருந்து கேட்க வேண்டும். அதே போல் செய்தியில் திருத்தங்கள் செய்வதும் இயலாததாக இருக்கிறது.

            ப்ரெய்ல் எழுத்துக்களைப் பதிவிட, ப்ரெய்ல் பதிவு கருவிகளும், ப்ரெய்ல் அச்சுக்கருவிகளும் உள்ளன. ஆனால் அவை மிகவும் விலை அதிகமானவையாக உள்ளன. உதாரணமாக, கணினிக்கான குறைந்த பட்ச அச்சு எந்திரத்தின் விலை சுமார் ₹2000/-. ஆனால் ஒரு குறைந்த விலை ப்ரெய்ல் அச்சு எந்திரம் சுமார் இரண்டு லட்ச ரூபாய். ப்ரெய்ல் பதிவுக் கருவிகள் சுமார் ₹50,000/- இல் இருந்து உள்ளன. ஆனால், ஆங்கிலத்துடன் தமிழ் வசதியும் வேண்டும் என்றால், விலை ஏறக்குறைய இரட்டிப்பு ஆகிறது. எப்படியென்றாலும், பார்வைக்குறைபாடுள்ள ஒரு சாமானிய தமிழனுக்கு இக்கருவிகள் எட்டாக்க்கனியாகவே உள்ளன.

            பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கும் நம்மைப் போல் எண்ணங்களை பதிவிடவும், பாடல், கதைகள், கட்டுரைகள் அல்லது இலக்கியங்களை உருவாக்கவும் விருப்பம் இருக்கும். அவர்கள் தங்கள் படைப்புகளைப் பதிவிட பார்வை உள்ளவர்களின் உதவியை எதிர்பார்க்க வேண்டிய நிலைமை உள்ளது. தங்கள் படைப்புகளில் திருத்தங்கள் செய்யவும், தங்கள் படைப்புகளை பிரசுரிப்பதற்கு மென் நகல் (soft copy) எடுக்கவும் மற்றொருவரை எதிர்பார்ப்பதால், அவர்களால் அதிகமான புதிய படைப்புகளை உருவாக்க முடிவதில்லை.

தொடுதிரையில் தொடுவதை அர்த்தம் கொள்ளல்

படிப்புகள்: 2424
  • அச்சிடுக
  • மின்-அஞ்சல்

தட்டுதல் (Taps):

வலது பெருவிரல்

மற்ற வலது விரல்கள்

இடது பெருவிரல்

முதல் முறை

இரண்டாம் முறை

ஆம்

இல்லை

இல்லை

_

_

இல்லை

ஒன்று

இல்லை

_

_

இல்லை

இரண்டு

இல்லை

_

_

இல்லை

மூன்று

இல்லை

_

_

இல்லை

நான்கு

இல்லை

_

_

ஆம்

நான்கு

இல்லை

_

_

ஆம்

ஒன்று

இல்லை

_

_

ஆம்

இரண்டு

இல்லை

_

_

ஆம்

மூன்று

இல்லை

புதிய அடி

ஆம்

இல்லை

ஆம்

_

_

இல்லை

ஒன்று

ஆம்

_

_

இல்லை

இரண்டு

ஆம்

_

_

இல்லை

மூன்று

ஆம்

_

_

இல்லை

நான்கு

ஆம்

_

_

ஆம்

நான்கு

ஆம்

_

_

ஆம்

ஒன்று

ஆம்

_

_

ஆம்

இரண்டு

ஆம்

_

_

ஆம்

மூன்று

ஆம்

புதிய பக்கம்

இவ்வாறு பிரிக்கப்பட்ட அரை ப்ரெய்ல் குறியீடுகளுக்கு யூனிகோடு எழுத்துருவில் மென்தமிழ் குறியீடுகளுக்கு முன், அதாவது E3C0 முதல் E3DF வரை ஒதுக்கியுள்ளேன். முழு ப்ரெய்ல் குறியீடுகளுக்கு 2800 முதல் 28FF வரை இடங்கள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளன.

மென்தமிழ் ப்ரெய்ல்

முதல் முறை தட்டும்போது மென்தமிழில் அது எவ்வகை குறியீடு என்பதையும் இரண்டாம் முறை தட்டும்போது அவ்வகை குறியீட்டில் அது எந்த குறியீடு என்பதையும் எளிதாக கற்றுக்கொண்டு விரைவாக பயன்படுத்த ஆரம்பித்துவிடலாம்.

 

முதல் பகுதி

குறியீட்டு வகை

0. _

நிறுத்தக்குறியீடுகள்

1. _

0-5 எண்கள் மற்றும் +, -

2. _

புள்ளி, 6-9 எண்கள், ^, *× மற்றும் /÷

3. _

(1+2)

ப்ரெய்ல் சுருக்கத்திற்கு (Braille Contractions) பயன்படும் @ குறியீடு, உயிரெழுத்துக்களில் குறில், தமிழ் ஆயுத எழுத்து மற்றும் நாணயக் குறியீடு.

4. _

உயிர் நீட்டும் மென்தமிழ் வாள் குறியீடு, உயிரெழுத்துக்களில் நெடில், தமிழ் ஆயுத எழுத்து மற்றும் இரட்டை உயிரெழுத்துக்களான , .

5. _

(1+4)

மென்தமிழ் வில் குறியீடு, வல்லினம் மற்றும் சதுர அடைப்புக்குறியீடுகள்

6. _

(2+4)

மென்தமிழ் வேல் குறியீடு, மெல்லினம் மற்றும் சுருண்ட அடைப்புக்குறியீடுகள்

7. _

(1+2+4)

மென்தமிழ் கேடயக் குறியீடு, இடையினம் மற்றும் சம குறியீடு

மற்ற கட்டுரைகள் ...

  • மென்தமிழ் ப்ரெய்ல் தொகுப்பாக்கி செயலியில் வழிசெலுத்தல்
  • மென்தமிழ் ப்ரெய்ல் மூலம் கணிப்பபொறி பயன்படுத்துதல்
  • மென்தமிழ் ப்ரெய்ல் தொகுப்பாக்கி பின்னூட்டம்
Top | + | - | reset
Copyright ©

CC0
To the extent possible under law, Edison has waived all copyright and related or neighboring rights to Menthamizh. This work is published from India.

2026 All rights reserved. Custom Design by Youjoomla.com
மென்தமிழ் பற்றி